ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
2022-09-05 18:57:28

ஆப்கானிஸ்தானில் 5ஆம் நாள் அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகுகள் பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தின் மையம், நன்கர்ஹர் மற்றும் குனார் மாநில எல்லையில் அமைந்தது.

குனார் மாநிலத்தில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்தனர். சில வீடுகள் இடிந்து விழுந்தன. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நன்கர்ஹர் மாநிலத்தில் பாதிப்பு தொடர்பான தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.