சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி தந்துள்ள புதிய வாய்ப்புகள்
2022-09-05 17:13:18

2022 சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி ஆகஸ்டு 31ஆம் நாள் முதல் செப்டம்பர் 5ஆம் நாள் வரை, பெய்ஜிங்கில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தனிச்சிறப்பான பொருட்களும் அறிவியல் தொழில் நுட்பத்திலான எண்ணியல் சேவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சீன-இலங்கை சங்கத்தின் புஷ்பகுமரா ஹெவகெனன்தனா இரண்டாவது முறையாக இப்பொருட்காட்சியில் கலந்துகொண்டார். அவர் கூறுகையில்,

வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சீன-இலங்கை சங்கம் கருந்தேயிலை, பல்வகை பழச்சுவை தேயிலை, கைவினை பொருட்கள் ஆகியவற்றை இப்பொருட்காட்சியில் காட்சிப்படுத்தியது. இப்பொருட்காட்சியில் காட்சி மூலம், சீனச் சந்தையில் மேலதிக வாய்ப்புகளைக் கண்டுள்ளோம் என்றார்.

பல தலைமுறைகளாக நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்த சாவ்துரி, முதல் முறையாக இப்பொருட்காட்சியில் கலந்துகொண்டார். அவர் கூறுகையில்,

இப்பொருட்காட்சியில் ஒத்துழைப்புக்கான பல வாய்ப்புகளைப் பெற்றுள்ளோம். இப்பொருட்காட்சி மிக தலைசிறந்த மேடையாகும் என்றார்.