7ஆவது கிழக்குப் பொருளாதார மன்றக் கூட்டம் ரஷியாவில் துவக்கம்
2022-09-05 17:43:14

7ஆவது கிழக்குப் பொருளாதார மன்றக் கூட்டம் 5ஆம் நாள் ரஷியாவின் வ்லாடிவொஸ்டொக் நகரில் துவங்கிது. 60க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பலதுருவமயமாக்க உலகத்துக்குச் செல்லுதல் இக்கூட்டத்தின் தலைப்பாகும். புதிய பொருளாதார முறைமையை விளைவிக்கும் சர்வதேச மாற்றப் போக்கைக் காட்டுவது, தொடர்புடைய அனைத்து தரப்புகளுக்கும் ஒரு பேச்சுவார்த்தை மேடை வழங்குவது ஆகியவை இம்மன்றக் கூட்டத்தின் நோக்கமாகும்.

2015ஆம் ஆண்டு மே 19ஆம் நாள் ரஷிய அரசுத் தலைவர் புதினின் உத்தரவுப்படி, தூரக்கிழக்குப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் சர்வதேச ஒத்துழைப்பை விரிவாக்கும் வகையில், ஆண்டுதோறும் வ்லாடிவொஸ்டொகில் கிழக்குப் பொருளாதார மன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.