லூ டிங் மாவட்டத்தில் நிலநடுக்கம்
2022-09-05 18:51:23

செப்டம்பர் 5ஆம் நாள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் கன்சி ச்சோவின் லூடிங் மாவட்டத்தில் ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆகப் பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை, தொலைத்தொடர்பு, வீடு முதலியவற்றின் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது காவல்துறை, தீயணைப்பு, மருத்துவம், தொலைத்தொடர்பு முதலிய துறைகளைச் சேர்ந்த 635 பேர் மீட்புதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர மீட்புதவி சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சேத நிலைமை அறிந்து கொள்ளும் விதம், ஆளில்லா ட்ரோன்கள் பயன்படுத்தபட்டு வருகின்றன.