கனடாவில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம்:10 பேர் பலி
2022-09-05 10:34:31

உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 4ஆம் நாள், கனடாவின் சஸ்காட்செவன் மாநிலத்தில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த மாநிலக் காவற்துறையினர் கூறினர். இத்தாக்குதலுக்குக் குறிப்பிட்ட நோக்கம் எதுவுமில்லை என முதல் கட்ட விசாரணைக்குப் பின் காவற்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது, சந்தேகிக்கப்படும் 2 குற்றவாளிகளைக் காவற்துறையின் அடையாளம் கண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவர் இன்னும் தப்பிச் சென்று விட்டதாக தெரிகிறது.