பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பொது சமிக்கை சேவை அளிக்கும் சீனா ஊடகக் குழுமம்
2022-09-06 14:08:05

2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சர்வதேசப் பொது சமிக்கை சேவை ஒத்துழைப்பு உடன்படிக்கையில், சீன ஊடகக் குழுமமும், ஒலிம்பிக் ஒளிபரப்பு சேவை நிறுவனமும் செப்டம்பர் 5ஆம் நாள் கையொப்பமிட்டன. இதைத் தொடர்ந்து சீன ஊடகக் குழுமம் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பொது சமிக்கை சேவை வழங்கும் அதிகாரப்பூர்வ நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், ஜிம்னாஸ்டிக்ஸ், மேசை பந்து, பூப்பந்து, மலை ஏறுதல் ஆகிய 4 விளையாட்டுப் போட்டிகளுக்கான பொது சமிக்கை தயாரிப்புக்கு சீன ஊடகக் குழுமம் பொறுப்பேற்கும். தேசிய நிலை வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களிலேயே, சீன ஊடக குழுமம் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி நடைபெறும் போது பொறுப்பேற்கும் பொது சமிக்கை தயாரிப்பு நிகழ்வுகள் மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநர் ஷென் ஹய் சியொங், ஒலிம்பிக் ஒளிபரப்புச் சேவை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Ianis eksakos ஆகியோர் இணையம் மூலம் நடைபெற்ற உடன்படிக்கை கையெழுத்திடும் விழாவில் கலந்து கொண்டனர்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பாஹ் அதற்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், சீன ஊடக குழுமம் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பொது சமிக்கை சேவை நிறுவனமாக மாறியுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார்.