தொலை உணர்வறிச் செயற்கைக் கோள்கள் ஏவதல்
2022-09-06 17:36:21

சீனாவின் ஷிச்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்தில், லாங் மார்ச்-2D ஏவூர்தி மூலம், யாவ்கான்-35 குடும்பத்தின்  5ஆவது தொகுதியைச் சேர்ந்த தொலை உணர்வறிச் செயற்கைக்கோள்கள் 6ஆம் நாள் 12:19 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன. அவை திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அறிவியல் பரிசோதனைகள், நிலம் மற்றும் மூலவளக் கணக்கெடுப்பு, வேளாண் விளைச்சல் மதிப்பீடு, இயற்கைச் சீற்றத் தடுப்பு மற்றும் குறைப்பு ஆகிய பணிகளுக்காக இச்செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படும்.