அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு நிறுவனம், உலகளவில் மிகப்பெரிய இணைய ஹேக்கர்
2022-09-06 17:34:34

உலகளவில் மிகப்பெரிய இணைய ஹேக்கர் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு நிறுவனம் என்பதற்கு, சீனத் தேசிய கணினி வைரஸ் அவசர சமாளிப்பு மையம் மற்றும் Qihoo 360 தொழில் நுட்ப நிறுவனம் அண்மையில் வெளியிட்ட புலனாய்வு அறிக்கைகள் புதிய சான்றுகளாகும்.

இந்த அறிக்கைகளின்படி, அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த சிறப்பு அணுகல் செயல்பாட்டுப் பணியகம்  அடுத்தடுத்து 41 இணையத் தாக்குதல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, சீனாவின் வடமேற்கு பாலிடெக்னிக்கல் பல்கலைக்கழகத்தின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களைத் தொடுத்து, பல முக்கியமான தொழில் நுட்பத் தரவுகளைத் திருடியது. மேலும், சீனாவின் பல்வேறு துறைகளிலான முக்கிய தொழில் நிறுவனங்கள், அரசு வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது இப்பணியகம் இணையத் தாக்குதல் தொடுத்து, குறிப்பிட்ட இணையச் சாதனங்களைக் கட்டுப்படுத்தி, உயர் மதிப்புள்ள தரவுகளைத் திருட முயன்று வருகிறது. அதனுடன், சீனாவிலுள்ள கைபேசி பயனர்களையும் அது ஒற்று கேட்டு, குறுந்தகவல்களைச் சட்டவிரோதமாகப் பெற்று, அவர்கள் இருக்கும் இடங்களை கண்டறிந்து வருகிறது.

சீனாவை மட்டுமல்ல, முழு உலகையும் அமெரிக்கா ஒற்று கேட்டு வருகிறது. இதற்கு, அதன் கூட்டணி நாடுகளும் விதிவிலக்கு அல்ல என்பதை வெளியிடப்பட்ட தகவல்களே காட்டுகின்றன.

அதிகமான சான்றுகள் வெளியிடப்படுவதோடு, அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் அவச்செயல் பரவலாக அறிந்து கொள்ளப்பட்டு வருகிறது. இணைய ஹேக்கர் வல்லரசு, ஒற்று கேட்டல் வல்லரசு, ரகசிய திருடன் ஆகிய பெயர்கள் அமெரிக்காவுக்குப் பொருத்தமானவை என்பதை பெருவாரியான சான்றுகள் நிரூபித்துள்ளன.