சீனாவில் கல்விக்கு ஒதுக்கீடு: ஜிடிபியில் 4 விழுக்காட்டுக்கும் அதிகம்
2022-09-06 17:29:36

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு நடைபெற்றது முதல் தற்போதுவரை, கடந்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ச்சியாக 4 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. பொதுத் துறை வரவுச் செலவு திட்டத்தில் மிகப் பெரிய பங்கு, கல்வித் துறை வகிக்கிறது.

தரவுகளின்படி, புதிதாக வேலை வாய்ப்பு பெற்றவர்கள் சராசரியாக 13.8 ஆண்டுகள் கல்வி பயின்றுள்ளனர். சீன மக்களின் கல்வி அறிவும், சமூக நாகரிக நிலையும் பயன் தரும் முறையில் உயர்த்தப்பட்டுள்ளன. கல்வித் துறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை முன்னெடுத்து, நாட்டின் மறுமலர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியை ஊட்டியுள்ளது. 6ஆம் நாள் நடைபெற்ற “10 ஆண்டுகால கல்வி” என்னும் கூட்டத்தில் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

படம்:ICPhoto