ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரக வாயிலில் வெடிகுண்டு தாக்குதல்:குட்ரெஸ் கண்டனம்
2022-09-06 15:27:31

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ரஷிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 5ஆம் நாள், ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் வெளியிட்ட அறிக்கையில், கடும் கண்டனம் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அவர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

சர்வதேச மனித நேயச் சட்டம், தூதாண்மை குழுவினர் உள்ளிட்ட பொது மக்கள் மற்றும் பொது வசதிகளின் மீதான தாக்குதல்களை கண்டிப்பாகத் தடை செய்கிறது என்று இந்த அறிக்கை மீண்டும் வலியுறுத்தியது.