பிரிக்ஸ் தொழில்துறை புத்தாக்கப் போட்டி சியாமெனில் துவக்கம்
2022-09-06 16:25:31

சீனாவின் சியாமென் நகரில் 2022ஆம் ஆண்டின் பிரிக்ஸ் தொழில்துறை புத்தாக்கப் போட்டி செவ்வாய்க்கிழமை துவங்கியது. ‘வலிமையான, பசுமையான மற்றம் ஆரோக்கியம் படைத்த உலக வளர்ச்சிக்கான தொழில்துறை புத்தாக்கம்’ இப்போட்டியின் தலைப்பாகும்.

இதில் கலந்து கொள்பவர்கள் தொழில்துறை இணையம், நுண்ணறிவு உற்பத்தி மற்றும் பசுமை வளர்ச்சி ஆகிய துறைகளில் போட்டியிட உள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1,330 திட்டங்கள் போட்டியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 90 திட்டங்கள் இறுதிச்சுற்றை எட்டியுள்ளன. பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெறுகிறது.

பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த இளம் திறமைசாலிகள், ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு ஒரு ஆக்கப்பூர்வமான மேடையை இப்போட்டி வழங்கியுள்ளது என்று போட்டியின் நடுவர் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் பாப்லோ மஷாடோ தெரிவித்தார்.