பிரிட்டனின் புதிய தலைமையமைச்சர் லிஸ் டிரஸ்
2022-09-06 14:06:28

பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் தேர்தல் முடிவு உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 5ஆம் நாள் வெளியிடப்பட்டது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

சுமார் ஒரு இலட்சத்து 60ஆயிரம் கட்சி உறுப்பினர்களிலேயே, டிரஸுக்கு 81 ஆயிரம் பேர் வாக்கு அளித்தனர். சுமார் 60 ஆயிரம் பேர் சுனக்கைக்கு ஆதரித்தனர்.

இவ்வாண்டில் 47 வயதான லிஸ் டிரஸ், பேரரசியின் நியமனத்தை ஏற்க, இன்று செவ்வாய்கிழமை ஸ்கோலந்துக்குச் செல்லவுள்ளார். அதைத் தொடர்ந்து, பிரிட்டனின் புதிய தலைமையமைச்சராக பெறுப்பேற்று  புதிய அமைச்சர்கள் பட்டியலை வெளியிடுவார்.