ஆப்கானிஸ்தானுக்கான ரஷிய தூதரக வாயிலில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம்
2022-09-06 14:05:32

ரஷிய வெளியுறவு அமைச்சகம் உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 5ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின் படி, அன்று காலை சமார் 10:50, ஆப்கானிஸ்தானுக்கான ரஷிய தூதரக வாயிலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் ரஷிய தூதரகத்திலுள்ள 2 பணியாளர்கள் கொல்லப்பட்டனர். உள்ளூர் ஆப்கானிஸ்தானின் பலர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷிய தூதரக வாயிலில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக, தீவிரவாத அமைப்பான "ஐ.எஸ் அமைப்பின்" ஐ.எஸ்.-கே கிளை, இணையதளம் மூலம் செய்தி வெளியிட்டுள்ளது.