சிச்சுவான் நிலநடுக்கம்:74 பேர் பலி
2022-09-07 17:01:06

கான்ஸி சோ நிலநடுக்க மீட்புப் பணி ஆணையம் மற்றும் யாஆன் நகரின் அவசர மேலாண்மை பணியகம் வெளியிட்ட தகவல்களின்படி, செப்டம்பர் 6ஆம் நாளரிவு 9 மணி வரை, கான்ஸி சோவில் நிலநடுக்கத்தால் 40 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காணாமல் போயினர். 170 பேர் காயமடைந்தனர். யாஆன் நகரில் 34 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காணாமல் போயினர். 89 பேர் காயமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புதவிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மற்றொரு தகவலின்படி, செப்டம்பர் 7ஆம் நாள் 12 மணி வரை, நிடுநடுக்க மீட்புதவிக்காக சீனாவின் பல்வேறு துறைகளும் சுமார் 9.27 கோடி யுவான் நன்கொடையாக வழங்கியுள்ளன.