சிச்சுவான் நிலநடுக்கம் - சீனாவுக்கு பல நாடுகள் ஆறுதல்
2022-09-07 19:46:30

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் லுடிங் மாவட்டத்தில் செப்டம்பர் 5ஆம் நாள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவுக்கு வருத்தம் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளன.

 சீனாவின் பேரழிவு தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்கவும் அவை விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்கு சீனா நன்றி தெரிவிப்பதாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் 7ஆம் நாள் தெரிவித்தார்.

தற்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிவாரண அமைப்புகள் லூடிங் மாவட்டத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இப்பேரழிவிலிருந்து மீண்டு, அருமையான தாயகம் புனரமைக்கப்படும் என்பதில் சீனாவுக்கு நம்பிக்கை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.