மூலவளப் பயன்பாடு பற்றிய ஷிச்சின்பிங்கின் முன்மொழிகள்
2022-09-07 11:31:33

நாடு முழுவதும் மூலவளத்தைப் பயன்படுத்தும் புதிய அமைப்புமுறையை மேம்படுத்த வேண்டும் என்றும், முக்கிய துறைகளில் முக்கிய தொழில் நுட்பங்களின் ஆய்வுப் பணியில் உண்மையான முன்னேற்றம் அடைந்து, பன்முகங்களிலும் மூலவளத்தின் சிக்கனத்தை நனவாக்க வேண்டும் என்றும் ஷச்சின்பிங் தெரிவித்தார்.

செப்டம்பர் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற பன்முகச் சீர்திருத்தத்துக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஆணையத்தின் 27ஆவது கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நீர், தானியம், நிலம், கனிமவளம் முதலவியவற்றை உயர் பயன் தரும் முறையில் பயன்படுத்தி, மூல வளத்தின் பயன்பாட்டு வழிமுறையில் மேம்பாடு அடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், எளிமையான, பச்சை மற்றும் குறைந்த கார்பன் கொண்ட வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.