சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பு
2022-09-07 17:21:58

சீனச் சுங்கத் துறை தலைமை பணியகம் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டு முதல் 8 மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 27.3 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.1 விழுக்காடு அதிகரித்தது. அதில் ஏற்றுமதித் தொகை 15.48 இலட்சம் கோடி யுவானுடன், கடந்த ஆண்டை விட 14.2 விழுக்காடு அதிகரித்தது. இறக்குமதித் தொகை 11.82 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 5.2 விழுக்காடு அதிகரித்தது.

இக்காலக்கட்டத்தில் ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம்,  அமெரிக்கா, தென்கொரியா ஆகியவற்றுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகையும் அதிகரித்தது.

ஆசியான் நாடுகளுடனான வர்த்தகத் தொகை, சீனாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத் தொகையில் 15 விழுக்காடு வகித்துள்ளது. ஆகஸ்டில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடனான வர்த்தகத் தொகை 23.8 விழுக்காடு அதிகரித்தது.

படம்:ICPhoto