பிரிட்டன் புதிய தலைமையமைச்சரின் உரை
2022-09-07 10:36:18

பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் லிஸ் டிரஸ் 6ஆம் நாள் செவ்வாய்கிழமை அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு தலைமையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவ்வாண்டில், 47வயதான டிரஸ், மார்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோரைத் தொடர்ந்து, பிரிட்டன் வரலாற்றில் மூன்றாவது பெண் தலைமையமைச்சராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.

அன்று ராணி 2ஆவது எலிஸபெத் புதிய அமைச்சரவையை அமைக்குமாறு டிரஸுக்கு அதிகாரம் வழங்கினார். அதற்குப் பின், தலைமையமைச்சர் மாளிக்கைக்கு முன் முதல்முறையாக நிகழ்த்திய உரையில் கூறுகையில், பொருளாதார அதிகரிப்பு, எரிசக்தி நெருக்கடி, மருத்துவச் சிகிச்சை அமைப்பின் மேம்பாடு முதலிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, முன்னுரிமை அளிக்கப்படும் என்று டிரஸ் உறுதியளித்துள்ளார்.