பிரேசிலின் 200ஆவது சுதந்திர தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2022-09-07 15:40:36

பிரேசில் சுதந்திரம் பெற்று 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் செப்டம்பர் 7ஆம் நாள் அந்நாட்டு அரசுத் தலைவர் போல்சனாரோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மிகப் பெரிய வளரும் நாடான பிரேசில், சுதந்திரம் மற்றும் அமைதியான வளர்ச்சி பாதையில் வளர்ந்து, பிரதேசம் மற்றும் சர்வதேச விவகாரங்களில் முக்கியப் பங்காற்றி வருகின்றது என்றார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில், சீனா மற்றும் பிரேசிலின் கூட்டு முயற்சியுடன், இரு நாட்டு உறவு நிதானமாக வளர்ந்து, நடைமுறை சாதனைகளை அடைந்து வருகின்றது என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.