சேவை வர்த்தகத்துக்கான பொருட்காட்சியில் பங்கெடுக்கும் நாடுகள் அதிகரிப்பு
2022-09-07 15:56:16

சேவை வர்த்தகத்துக்கான 2022 சீனச் சர்வதேசப் பொருட்காட்சி 6 நாட்கள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. புத்துணர்வு தரக்கூடிய தொழில் நுட்பங்கள் இதில் பங்கெடுத்த காட்சியாளர்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளதோடு, உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளையும் கொண்டு வந்துள்ளன.

நடப்புப் பொருட்காட்சியில் 507 முன்னணி தொழில் நிறுவனங்கள் நேரடியாகப் பங்கெடுத்தன. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 10 நாடுகள் நாட்டின் பெயரில் காட்சியரங்குகளை அமைத்தது இதுவே முதன்முறை.

சேவை வர்த்தகத்துக்கான சீனச் சர்வதேசப் பொருட்காட்சி இவ்வாண்டு, 10ஆவது முறை நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளில், சேவை வர்த்தகத்தில் சீனாவுடன் ஒத்துழைக்கும் கூட்டாளிகளின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது. சீனச் சந்தையின் பெரும் ஈர்ப்பாற்றலும், சீனாவின் திறப்பு அளவு விரிவாக்கம், ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கத்துக்குத் துணைபுரியும் இப்பொருட்காட்சியும், சீனாவின் நண்பர்கள் அதிகரிப்பதற்கான காரணங்களாகும்.

மேலும், இப்பொருட்காட்சியில் எட்டப்பட்ட சாதனைகள் நடைமுறைக்கு வந்த பிறகு முழு உலகிற்கும் நன்மை தரும் என நம்பப்படுகிறது.