தூதாண்மை நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்குச் சீனா கண்டனம்
2022-09-07 10:36:08

ஆப்கானிஸ்தானுக்கான ரஷிய தூதரகத்தில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து, தூதாண்மை நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலுக்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்தது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் 6ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் தரப்பு பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டுத் தூதாண்மை நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று சீனா விருப்பம் தெரிவித்தது. மேலும் ஆப்கானிஸ்தானின் அமைதி, நிதானம் மற்றும் பாதுகாப்பைக் கூட்டாகப் பேணிகாப்பதற்குச் சர்வதேசச் சமூகம் ஆக்கப்பூர்வ பங்காற்ற வேண்டும் என்று  மாவோ நிங் கூறினார்.