8ஆவது பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்ற மன்றத்தில் லி ஷன் சூ உரை
2022-09-07 14:57:09

பெய்ஜிங்கில் மக்கள் மாமண்டபத்தில் காணொளி வழியில் 8ஆவது பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்ற மன்றத்துக்குத் தலைமை தாங்கிய சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் லி ஷன் சூ 6ஆம் நாளிரவு முக்கிய உரை நிகழ்த்தினார்.

இந்த துவக்க விழாவில் அவர் கூறுகையில், ஐந்து பிரிக்ஸ் நாடுகளின் சட்டமியற்றல் அமைப்புகள்  நட்பார்ந்த தொடர்பை நீண்டகாலமாக நிலைநிறுத்துவது, பல்வேறு துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக்கான சட்ட உத்தரவாதங்கள் மற்றும் கொள்கை ஆதரவை வழங்குகின்றது. இதர பிரிக்ஸ் நாடுகளின் சட்டமியற்றல் அமைப்புகளுடன் இணைந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாட்டுக் கூட்டாளி உறவின் ஆழமான வளர்ச்சியை முன்னேற்றச் சீனத் தேசிய மக்கள் பேரவை விரும்புகின்றது என்றார்.

இந்திய நாடாளுமன்ற வெளியுறவுக் கமிட்டியின் தலைவர் சௌத்ரி உள்ளிட்ட பல நாடுகளின் அதிகாரிகள் காணொளி மூலம் இம்மன்றத்தில் கலந்து கொண்டனர். "சட்டமியற்றல் அமைப்புகளின் பங்களிப்பை ஆற்றி, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உயர்தரக் கூட்டாளி உறவை உருவாக்குவதை முன்னேற்றுவது" என்ற தலைப்பைச் சுற்றி, அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.