ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தின் சுற்றுப்புறத்தில் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்க வேண்டும்: IAEA
2022-09-07 18:27:40

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் செப்டம்பர் 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு நிலைமை மீது மிகுந்த கவனம் செலுத்துவதாகவும், அதன் சுற்றுப்புறத்தில் அணு பாதுகாப்பு மண்லடத்தை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இந்நிறுவனத்தின் தலைமை இயக்குநரின் தலைமையில் 14 நிபுணர்கள் இடம்பெற்ற பிரதிநிதிக் குழு ஒன்று செப்டம்பர் முதல் நாள் இந்த அணு மின் நிலையத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. தற்போது இந்நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இருவர் இந்நிலையத்தில் தங்கியிருக்கின்றனர்.

இது குறித்து ஐ.நாவுக்கான சீனாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி கெங் ஷுவாங் 6ஆம் நாள் கூறுகையில், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் நிபுணர்கள் ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தில் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கு சீனா ஆதரவளிப்பதோடு, தொடர்புடைய தரப்புகளுடன் இந்நிறுவனம் கருத்து பரிமாற்றத்தை நிலைநிறுத்தவும் ஊக்குவிக்கிறது என்று தெரிவித்தார்.