ஈர்ப்பு ஆற்றல் கொண்ட சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம்
2022-09-08 20:14:42

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் செப்டம்பர் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 27 லட்சத்து 30 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 10.1 விழுக்காடு அதிகரித்தது.

உலகப் பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள நிலையில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் அதிக ஈர்ப்பு ஆற்றலையும் உறுதித்தன்மையையும் கொண்டுள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் முக்கிய ஆற்றாலாக இருக்கும் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் பெரும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளன. முதல் 8 மாதங்களில், இந்நிறுவனங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 13 லட்சத்து 68 ஆயிரம் கோடி யுவானை எட்டி, சீனாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் 50.1 விழுக்காடு வகித்துள்ளது.

மேலும், சீனாவில் பல தரப்பட்ட சந்தைகள் உள்ளன. முதல் 8 மாதங்களில், ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம, அமெரிக்கா ஆகிய முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை முறையே 14, 9.5 மற்றும் 10.1 விழுக்காடு அதிகரித்தது.

தவிரவும், சீனா நடைமுறைக்கு ஏற்ப, சொந்த மேம்மைகளைப் பயன்படுத்தி, உலக நாடுகளுக்குத் தேவையான பொருட்களை விநியோகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் மின்சார வாகனத் தொழில் உயர்வேக வளர்ச்சியை அடைந்துள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.