எரிவாயு பிரச்சினையைச் சந்திக்கின்ற ஐரோப்பிய நாடுகள்
2022-09-08 16:14:49

ஐரோப்பிய நாடுகள், எரிவாயு பற்றாக்குறை பற்றி கவலைப்படுகின்றன இருப்பினும், சாதனங்களில் கோளாறுகள் நீக்கப்படும் வரை, நார்ட்ஸ்டிரீம்-1 குழாய் வழியான எரிவாயு வினியோகம் நிறுத்தப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது. இது அவை எதிர்நோக்கும் மேலும் பெரும் சிக்கலாகும்.

ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறையால் ஏற்பட்ட எரிபொருள் விலை, வாழ்க்கை மற்றும் தொழிற்துறைக்குத் தேவையான பொருட்களின் விலை உயர்வைத் தீவிரமாக்கியுள்ளது. எரியாற்றல் அமைப்பு முறையை மாற்ற விரும்பினால், ஐரோப்பிய நாடுகள், அதிக காலத்தையும் செலவையும் செலவழிக்க வேண்டும். சமூக கொந்தளிப்பு விரைவில் வரக் கூடும் என்று ஆய்வாளர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இந்நிலைமை குறித்து ஐரோப்பாவின் கூட்டணியான அமெரிக்கா எதுவும் செய்யவில்லை. அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரி பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கக் கூடாது என்று அமெரிக்க எரியாற்றல் அமைச்சர் க்ரின் ஹோம் வேண்டுகோள் விடுத்தார். குறுகிய காலத்துக்கு அமெரிக்கா உதவி செய்யாது என்பதை இது வெளிகாட்டுகிறது.

எரியாற்றல் நெடுக்கடி குறித்து ஐரோப்பிய அரசியல்வாதிகள் சரியாக யோசிக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்த வளர்ச்சிப் பாதை ஐரோப்பாவுக்கு பொருந்தும் என்று சிந்திக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது.