சீனாவில் 38ஆவது ஆசிரியர் தினம் ஷிச்சின்பிங் வாழ்த்துகள்
2022-09-08 16:01:21

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 7ஆம் நாள் புதன்கிழமை பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தலைசிறந்த ஆசிரியர் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பயின்று வரும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் அளித்தார்.

பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 120ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீனாவின் 38ஆவது ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர் அனைவருக்கும் அவர் கடிதத்தில் நல்வாழ்த்துகள் தெரிவித்தார்.

கடந்த ஓர் ஆண்டில், பல்கலைக்கழகத்தில் கல்வி பெற்று, பொருளாதார வளர்ச்சி அடையாத பகுதிகளில் ஆசிரியராகப் பயிற்சி செய்த மாணவர்கள், தங்களது திறனை அதிகரித்ததோடு பார்வையையும் விரிவாக்கி, ஊரில் ஆசிரியராகப் பணி புரிவதற்கான நம்பிக்கையையும் உறுதிப்படுத்தியுள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.