பிரிக்ஸ் புதிய தொழில் புரட்சிக்கான கூட்டுறவு மன்றக் கூட்டம் துவக்கம்
2022-09-08 17:05:58

2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் புதிய தொழில் புரட்சிக்கான கூட்டுறவு மன்றக்கூட்டம் செப்டம்பர் 7ஆம் நாள் சீனாவின் சியாமென் நகரில் துவங்கியது.

“புதிய தொழில் புரட்சிக்கான கூட்டுறவை ஆழமாக்கி, தொடரவல்ல பொது வளர்ச்சியை முன்னேற்றுவது” இக்கூட்டத்தின் தலைப்பாகும். சீனாவுக்கான சில நாடுகளின் தூதரகங்கள் மற்றும் துணை நிலை தூதரகங்கள், தொடர்புடைய சர்வதேச அமைப்புகள், புகழ்பெற்ற நிறுவனங்கள், தொழில் சங்கங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 300க்கும் மேலான பிரதிநிதிகள் இதில் பங்கெடுத்தனர்.

தொழிலின் எண்மயமாக்க முறை மாற்றம், தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலிக்கான ஒத்துழைப்பு, தொழில் துறையின் தொடரவல்ல வளர்ச்சி முதலிய விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆழமாக விவாதம் நடத்தினர்.

ரஷியத் தொழில் மற்றும் வணிகத் துறை துணை அமைச்சர், இந்திய வணிக மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னேற்றப் பிரிவின் முதல் ஆலோசகர் ஆகியோர் தொழிலின் எண்மயமாக்க முறை மாற்றம் மற்றும் தர உயர்வு பற்றி உரையாற்றினர்.