முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான சீனச் சர்வதேசப் பேச்சுவார்த்தை துவக்கம்
2022-09-08 19:55:32

2022ஆம் ஆண்டு முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான சீனச் சர்வதேசப் பேச்சுவார்த்தையும், சர்வதேச முதலீட்டு மன்றக் கூட்டமும் செப்டம்பர் 8ஆம் நாள் சீனாவின் சியாமென் நகரில் துவங்கின. உலக வளர்ச்சி:எண்ணியல் துறையில் வாய்ப்புகளின் பகிர்வு மற்றும் பசுமையான எதிர்காலத்தில் முதலீடு என்பது நடப்பு பேச்சுவார்த்தையின் கருப்பொருளாகும். உயர்நிலை திறப்பு மற்றும் சர்வதேச முதலீட்டு ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் இப்பேச்சுவார்த்தை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானம், பிரிக்ஸ் ஒத்துழைப்பு, ஆர்சிஇபி பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றம் ஆகியவற்றுக்குச் சேவைபுரியும்.

இப்பேச்சுவார்த்தையின் போது நடைபெறும் 41 முக்கிய நிகழ்வுகளில், பிரிக்ஸ் தொடரவல்ல முதலீட்டுக் கருத்தரங்கு, கடல் கடந்த சீன வணிகர்களின் முதலீட்டு உச்சிமாநாடு, குலாங்யூ கருத்தரங்கு, ஆர்சிஇபி சர்வதேச ஒத்துழைப்புக் கருத்தரங்கு உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. மேலும், சீனாவில் வெளிநாட்டு வணிகர்களுக்கான முதலீட்டு வழிகாட்டல், வெளிநாடுகளில் சீன நிறுவனங்களின் வளர்ச்சி அறிக்கை, பிரிக்ஸ் முதலீட்டு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளன.