காற்று மாசுபாட்டைச் சமாளிக்க முழு உலகின் முயற்சி:குட்ரைஸ்
2022-09-08 16:07:17

3ஆவது சர்வதேச நீல வானத்துக்கான தூய்மையான காற்று தினத்தை ஒட்டி, ஐ.நா.தலைமைச் செயலாளர் குட்ரைஸ் 7ஆம் நாள் காணொளி வழியாக நிகழ்த்திய உரையில், சர்வதேச சமூகம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கூட்டாக முயற்சி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது பூமியில் 99விழுக்காட்டினர் காற்று மாசுபாட்டு பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இதைச் சமாளிக்க, புதுப்பிக்கவல்ல எரியாற்றலுக்கான முதலீட்டை அதிகரிப்பது, புதை படிவ எரிப்பொருட்களத் தவிர்ப்பது, பூஜ்ய உமிழ்வு வாகனங்களைப் பயன்படுத்துவது, கழிவுப் பொருட்களை தீங்கற்ற முறையில் கையாள்வது முதலியவற்றைத் தூண்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், காற்றுமாசுபாட்டிலிருந்து எந்த நாடுகளும் தப்பிக்க முடியாது. இதனால், பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சி அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.