ஆசிரியர்களுக்கு மதிப்பு அளிக்கும் ஷி ச்சின்பிங்
2022-09-09 19:03:46

கடந்த 10 ஆண்டுகளில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பலமுறை பள்ளிகளில் பயணம் மேற்கொண்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடி உள்ளார். ஆசிரியர்களுக்கு அவர் எப்போதுமே பெரும் மதிப்பு அளித்து வருகிறார்.

அவர் கூறுகையில், நூற்றாண்டுக்கான வளர்ச்சியில் கல்வி முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் முக்கியமானவர்கள் என்றார்.

ஷி ச்சின்பிங் பள்ளிப் படிப்புக்குப் பின்னும் தாம் பயின்ற பள்ளியையும் ஆசிரியர்களையும் எப்போதுமே நினைத்து வருகிறார். நேரம் இருக்கும்போதெல்லாம் தனது ஆசிரியர்களைச் சந்தித்து வருகிறார். சமூகத்தில் மதிப்பு அளிக்கப்படும் தொழிலாக ஆசிரியர் பணி விளங்குகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.