உலகளவில் முன்னணி தொழில் நிறுவனங்களை ஈர்த்துள்ள பொருட்காட்சி
2022-09-09 16:50:39

5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெற உள்ளது. தற்போது இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ள தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகளவில் 280க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ள உள்ளன. அவற்றில் சுமார் 90 விழுக்காடு நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் முன்பு கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஷாங்காயில் 8ஆம் நாள் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இத்தகவல் வெளியிடப்பட்டது.

நடப்புப் பொருட்காட்சியில் முன்பை விட மேலும் உயர்தரக் கண்காட்சிகள், மேலதிக கூட்டாளிகள், தொழில்முறை சார் மேலும் பெரும் தனித்துவம் ஆகியவை காணப்படுவதோடு, பல புதிய பொருட்களும் முதன்முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.