குடும்பம் மற்றும் நாட்டின் மீதான ஷி ச்சின்பிங்கின் உணர்வு
2022-09-09 19:04:39

சீனாவின் முக்கியமான பாரம்பரிய விழாக்களில் ஒன்றான நிலா விழாவின்போது சீன மக்கள் குடும்பதினருடன் ஒன்றுகூடி, நிலாவைக் கண்டு இரசித்து, நிலா கேக் சாப்பிட்டு, எதிர்காலத்தில் இனிமையான வாழ்க்கை மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கூறுகையில், தற்போது சமூகம் உயர்வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. மக்கள் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகின்றனர். பரபரப்புடன் பணியில் ஈடுபடும் போது உண்மையான உணர்வை அலட்சியம் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

நிலா விழா, குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடும் விழாவாகும். குடும்பம் மற்றும் குடும்பத்தின் கல்விக்கு ஷி ச்சின்பிங் எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

குடும்பம், நமது முதலாவது வகுப்பு;  பெற்றோர் முதலாவது ஆசிரியர். குடும்பங்கள் நன்றாக இருந்தால், நாடு நன்றாக இருக்கும். தேசம் நன்றாக இருக்கும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்துள்ளார்.

 குடும்ப வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புடையது. ஒவ்வொரு குடும்பமும் வளர்ச்சி அடைந்தால்தான், தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியைப் பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.