வட கொரியா தேசிய தினம்:ஷிச்சின்பிங் வாழ்த்துகள்
2022-09-09 15:25:30

வட கொரியாவின் 74ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அதியுயர் தலைவருமான கிம் ஜாங் உனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதாரத்தின் மேம்பாடு முதலிய துறைகளில் வட கொரிய மக்கள் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளனர். கோவிட்-19 தொற்று நோய் எதிர்ப்புப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், வட கொரியாவுடனான நெடுநோக்கு தொடர்பை நிலைநிறுத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு உறவை சீராக வளர்த்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை தர சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.