ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கு சீன அரசுத் தலைவரின் வாழ்த்துகள்
2022-09-09 15:22:47

ஆப்பிரிக்க ஒன்றியம் நிறுவப்பட்ட 20ஆண்டு நிறைவு, சீனாவுக்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவு ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் நடப்புத் தலைவரும் செனகல் அரசுத் தலைவருமான சாலே ஆகியோர் செப்டம்பர் 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக, ஆப்பிரிக்க நாடுகள் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையில் வளமடையும் பொருட்டு ஒன்றுபட்டு, மறுமலர்ச்சி மற்றும் ஒருமைப்பாட்டு ஆக்கப்பணியில் விரைவாக முன்னேறிச் செல்கின்றன என்றார். மேலும், சீன-ஆப்பிரிக்க ஒன்றிய உறவின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஷிச்சின்பிங், ஆப்பிரிக்கத் தரப்புடன் இணைந்து, சீன-ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவை புதிய தொடக்கப் புள்ளியாக்க் கொண்டு, இரு தரப்பிடையேயான பாரம்பரிய ஒத்துழைப்பு உறவை வளர்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சாலே கூறுகையில், ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் சீனாவின் பாரம்பரிய நட்புறவு, ஒற்றுமை, ஒத்துழைப்பு, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் கட்டுக்கோப்புக்குள் உயிராற்றல் நிறைய கூட்டுறவு ஆகியவற்றுக்கு உயர்ந்த பாராட்டு தெரிவித்தார்.