சீனாவில் கல்வி பரவல் நிலையின் வரலாற்று பாய்ச்சல் வளர்ச்சி
2022-09-10 16:26:44

கடந்த 10 ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், சீனாவில் பல்வேறு நிலை கல்விக்கான பரவல் அளவு, நடுத்தர மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடுகளின் சராசரி நிலையை அடைந்துள்ளது அல்லது தாண்டியுள்ளது.

தற்போது, சீனாவில் பல்வேறு வகையான பள்ளிகளின் எண்ணிக்கை, ஏறக்குறைய 5 இலட்சத்து 30 ஆயிரமாகும். 29 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். தொழிலாளர்கள் சராசரியாக 10.9 ஆண்டுகள் கல்வி பெற்றுள்ளனர் என்று சீனக் கல்வித்துறை அமைச்சர் ஹுவாய் ஜின்பெங் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் நிதியுதவி செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 130 கோடியாகும் என்று தெரிய வந்துள்ளது.