உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை
2022-09-10 16:42:38

உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசாங்கம் உள்நாட்டில் விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் பாசுமதி அல்லாத அரிசிக்கு 20 விழுக்காடு ஏற்றுமதி வரி விதிப்பதாக வியாழன் அன்று அறிவித்தது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதிக்கான தடையானது உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி உணவுப் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

ரஷ்யா-உக்ரைன் மோதல், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் காரணமாக, உலகம் முழுவதும் உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலை அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 விழுக்காடு பங்களிப்பை கொண்டுள்ளது. மேலும், மே மாதத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு, இந்திய அரசு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.