எரியாற்றல் விலையைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சி
2022-09-10 16:54:39

ஐரோப்பிய ஒன்றியத்தின் எரியாற்றல் துறை அமைச்சர்கள் சிறப்புக் கூட்டம் 9ஆம் நாள் பெல்ஜியத்தின் பிரசல்ஸில் நடைபெற்றது. உயர்ந்து வரும் எரியாற்றல் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் கூடிய விரைவில் அவசர நடவடிக்கைகளை வகுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் எரியாற்றல் துறை அமைச்சர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

உறுப்பு நாடுகளில் மின்சார தேவையை ஒருங்கிணைத்து குறைப்பது, குறைவான உற்பத்தி செலவைக் கொண்ட மின் உற்பத்தியாலைகளின் வருமானத்துக்கு வரம்பை நிர்ணயிப்பது, படிம எரியாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வருமான வரியை வசூலிப்பது, அவரச மற்றும் தற்காலிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வகுப்பது முதலியவை பற்றி ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து வருகின்றது.

உக்ரேன் மோதல் நிகழ்ந்த பின், ஐரோப்பாவில் எரியாற்றல் விநியோகப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின்சாரம், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை பெரிதும் உயர்ந்து வருகின்றது. ஐரோப்பாவின் பண வீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இது அதிக நிர்பந்தத்தைக் கொண்டு வந்துள்ளது.