கல்வியைப் பாதுகாப்பாகப் பெறும் உரிமை காக்க வேண்டும்:குட்ரேஸ்
2022-09-10 16:52:59

செப்டம்பர் 9ஆம் நாள், தாக்குதலிலிருந்து கல்வியைப் பாதுகாக்கும் சர்வதேச தினமாகும். இதற்கு ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் உரைநிகழ்த்துகையில், பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் மீதான தாக்குதல்களை, உடனே நிறுத்தி, அனைவரும் கல்வியைப் பாதுகாப்பாகப் பெறுவதற்கு, உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று, கேட்டுக்கொண்டார். 

தாக்குதலிலிருந்து கல்வியைப் பாதுகாக்கும் சர்வதேசக் கூட்டணியின் அறிக்கையில், 2020-2021ம் ஆண்டு காலத்தில், உலகளவில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மீது ராணுவ இலக்காக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பல நிகழ்த்தப்பட்டுள்ளன என்று பதிவு செய்யப்பட்டது.

பாதுகாப்பு பள்ளி அறிக்கையை அங்கீகரித்துச் செயல்படுத்துமாறு குட்ரேஸ், ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.