U-17 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை லோகோ வெளியீடு
2022-09-11 17:33:59

17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான சின்னத்தை, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் சனிக்கிழமை வெளியிட்டார்.

இந்தியாவில் நடைபெறும் முதல் ஃபிஃபா மகளிர் போட்டி இதுவாகும். இக்கால்பந்து போட்டி ஒடிசா, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் அக்டோபர் 11 ஆம் நாள் முதல் 30 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.