மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை மோடி தொடங்கி வைத்தார்
2022-09-11 17:34:43

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை காணொளி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

குஜராத்தின் அகமதாபாத் மாநகரில் உள்ள அறிவியல் நகரத்தில், இம்மாநாடு முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் வலுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கச்சூழலை உருவாக்க, கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வில் மத்திய-மாநில ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு வழிமுறைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இம்மாநாடு நடைபெறுகிறது.

இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.