பாகிஸ்தான் வெள்ளபெருக்கு இடத்துக்கு குட்ரேஸ் பயணம்
2022-09-11 17:23:47

ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் 10ஆம் நாள் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷரிஃபுடன், அந்நாட்டின் பலொச்சிஸ்தான் மற்றும் சின்ட் மாநிலங்களில் பயணம் மேற்கொண்டார். அண்மையில் அந்த இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, பெரிதும் சீர்குலைந்த உலகப் பண்பாட்டுச் செல்வமான மொகெஞ்சதாரோ சிதிலத்தையும் பார்வையிட்டனர்.

ஜுன் பாதி முதல் இதுவரை பாதிஸ்தானில் பெய்து வந்த கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கு போன்ற சீற்றங்களில் 1396 பேர் உயிரிழந்தனர். 12 ஆயிரத்து 728 பேர் காயமடைந்துள்ளனர்.