வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த "பார்பேரியன்"
2022-09-12 17:17:20

டிஸ்னியின் 20வது செஞ்சுரி ஸ்டுடியோஸ் மற்றும் நியூ ரீஜென்சியின்  திகில் படமான "பார்பேரியன்" அதன் தொடக்க வார இறுதியில் சுமார் 100 இலட்சம் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்து, வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது என்று காம்ஸ்கோர் நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

டிஸ்னியின் ஸ்டார் ஸ்டுடியோஸின் இந்திய கற்பனைத் திரைப்படமான "பிரம்மாஸ்திரா பகுதி 1: ஷிவா" இந்த வார இறுதியில் வட அமெரிக்காவில் 44 இலட்சம் டாலர்கள் வசூல் செய்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.

சோனி பிக்சர்ஸின் அதிரடி நகைச்சுவைத் திரைப்படமான "புல்லட் ரயில்" அதன் ஆறாவது வார இறுதியில் 32.5 இலட்சம் டாலர்கள் வசூல் செய்து, வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக 9.254 கோடி டாலர்களை வசூலித்துள்ளது.