தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கு ஒற்றுமை தேவை:குட்ரேஸ்
2022-09-12 16:25:50

செப்டம்பர் 12ஆம் நாள் ஐ.நாவின் தெற்கு தெற்கு ஒத்துழைப்பு தினமாகும். இது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் உரைநிகழ்த்துகையில், ஒற்றுமையை வலுபடுத்தினால் தான், முன்பு கண்டிராத சவால்கள் மற்றும் கொந்தளிப்பான நிலைமையைச் சமாளித்து, தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் வெற்றியைப் பெற முடியும் என்று குறிப்பிட்டார்.

தெற்கு தெற்கு ஒத்துழைப்பு, முத்தரப்பு ஒத்துழைப்பு ஆகியவை, வளரும் நாடுகள், காலநிலை மாற்றம், கோவிட்-19 நோய் பரவல் முதலிய சர்வதேச நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கும், 17 தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளை நனவாக்குவதற்கும் மிக முக்கியமானதாக அமைந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.