பாகிஸ்தானுக்குச் சீனா வழங்கிய தானியங்கள்
2022-09-12 19:02:33

பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் நோங் ரோங் 11ஆம் நாள் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்துக்குச் சென்று, வெள்ளபெருக்கினால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்குச் சீனா வழங்கிய நிவாரணப் பொருட்களை ஒப்படைத்தார். நன்கொடையாக வழங்கப்பட்ட இத்தொகுதியான பொருட்கள்,

தானியங்களாகும். பாதிக்கப்பட்ட சுமார்  3,000 உள்ளூர் குடும்பங்களின் அவசர உணவுத் தேவைகளை இது பூர்த்தி செய்ய முடியும்.

பாகிஸ்தானின் போதைப்பொருள் தடுப்பு துறை அமைச்சர் நவாப்சாதா ஷசைன் புகாட்டி, சீனாவின் தாராள உதவிக்கு நன்றி தெரிவித்தார்.

கல்வி, மருத்துவம் முதலிய உள்ளூர் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தின் நிலைமையை மேம்படுத்தும் வகையில், சீனாவுடன் ஆழமான ஒத்துழைப்பை வலுப்படுத்த பாகிஸ்தான் எதிர்பார்க்கின்றது என்று அவர் கூறினார்.