சீனாவில் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி
2022-09-12 16:31:16

பொருளாதாரத்தை நிதானப்படுத்தும் அரசின் கொள்கைகளின் காரணமாக ஆகஸ்ட் திங்களில் சீனாவில் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து மீட்சி அடைந்து வருகின்றன.

சீன நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனச் சம்மேளனம் சுமார் 3000 நிறுவனங்களின் மீது மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிட்ட ஆகஸ்ட் திங்களுக்கான குறியீட்டைப் பார்த்தால், இந்த நிறுவனங்களின் வளர்ச்சி நிலைமை ஜுலை திங்களில் இருந்ததற்குச் சமமாகும் என்று தெரிகிறது.

கண்காணிக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் தங்குமிடம் மற்றும் உணவகத் துறையின் வளர்ச்சி குறியீடு 0.3 புள்ளிகள் அதிகரித்து, மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக மாறியுள்ளது. மேலும், தொழிற்துறையின் வளர்ச்சி குறியீடு 0.1 புள்ளிகள் அதிகரித்து, ஜுலை திங்களில் இருந்த சரிவை மாற்றியமைத்துள்ளது.