உக்ரைன் நிலைமை குறித்து ரஷிய மற்றும் பிரான்ஸ் அரசுத் தலைவர்களின் தொடர்பு
2022-09-12 16:26:08

ரஷிய அரசுத் தலைவர் புதின் 11ஆம் நாள் பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். உக்ரைன் நிலைமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதில், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் பங்கேற்புடன் ஜாபோரோஜியே அணுமின் நிலையம் மற்றும் சுற்றியுள்ள நிலைமை குறித்து அரசியல் முறை சாரா ஒத்துழைப்பை நடத்த ரஷியாவும் பிரான்ஸும் விருப்பம் தெரிவித்தன.

மேலும், உக்ரைன் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கி மற்றும் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கிராஸ்ஸி ஆகியோருடன் மக்ரோன் தொடர்பு கொள்வார் என்றும் ஜாபோரோஷியே அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், புட்டினுடன் அடுத்த சில நாட்களில் அவர் மீண்டும் பேசுவார் என்றும் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.