இவ்வாண்டு 200,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறினார்
2022-09-12 17:18:05

2022 ஆம் ஆண்டில் இதுவரை 200,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக இலங்கையின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் ஆகஸ்ட் மாதத்தில் 32.5 கோடி டாலர்களை எட்டியுள்ளது. இது ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இவ்வாண்டின் இறுதிக்குள் சுமார் 330,000 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக இலங்கையை விட்டு வெளியேறுவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இலங்கை அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்நோக்கும் நேரத்தில், வங்கி முறை மூலம் நாட்டிற்கு பணம் அனுப்பிய தொழிலாளர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.