சீன-ஜப்பானிய உறவு வளர்ச்சி பற்றிய இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் அறிவுரை
2022-09-13 13:41:33

சீன-ஜப்பானிய தூதாண்மை உறவு இயல்பு நிலைக்குத் திரும்பிய 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 12ஆம் நாள் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ காணொளி வழியாக உரைநிகழ்த்தினார்.

புதிய காலத்தின் தேவைக்குப பொருந்தும் இரு நாட்டுறவு குறித்து அவர் ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்தார்.

வாக்குறுதியைச் செயல்படுத்தி, சீன-ஜப்பானிய உறவின் அரசியல் அடிப்படையைப் பேணிக்காக்க வேணாடும். ஒட்டுமொத்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சரியான வளர்ச்சி திசையை நிலைநிறுத்த வேண்டும். ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று நன்மை வழங்கி கூட்டு வெற்றியைப்  பெற வேண்டும். இரு நாடுகளுக்கிடையே ஆக்கப்பூர்வமான மற்றும் நட்புடைய பரஸ்பர புரிந்துணர்வின் உருவாக்கத்துக்கு வழிகாட்ட வேண்டும். கால ஓட்டத்துக்கு இணங்க, பலதரப்புவாதத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.

ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யொஷிமலா காணொளி வழியாக உரைநிகழ்த்துகையில், இரு தரப்பும் அடுத்த 50ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு, ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான உறவை அமைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.