நிலா விழா விடுமுறைக் காலத்தில் பயணம் மேற்கொண்ட 7 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள்
2022-09-13 16:50:50

2022ஆம் ஆண்டின் நிலா விழா சுற்றுலா சந்தை நிலைமையைப் பற்றி சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம் செப்டம்பர் 12ஆம் நாள் வெளியிட்டது. இந்த விடுமுறைக்காலத்தில்  7 கோடியே 34 இலட்சத்து 9 ஆயிரம் பேர் உள்நாட்டு பயணம் மேற்கொண்டுள்ளனர். உள்நாட்டுச் சுற்றுலா வருமானம் 2868 கோடி யுவானை எட்டியுள்ளது.

உள்ளூர் சுற்றுலா, முக்கிய சுற்றுலா வழிமுறையாகும். இக்காலத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்ப்பது, கிராமப்புற சுற்றுலாவிற்குச் செல்வது ஆகியவை சுற்றுலாப் பயணத்தின் முக்கிய பகுதிகளாகும். நுண்கலை காட்சியகம், அருங்காட்சியகம் முதலியவை சுற்றுலாப் பயணிகளின் முக்கியமான பொழுதுபோக்கு இடங்களாக மாறியுள்ளன.

பல்வேறு காட்சி தலங்களில், பண்பாட்டு மற்றும் அறிவியல் தொழில் நுட்பக் காரணிகள், பாரம்பரிய விழாவுடன் சிறப்பாக ஒருங்கிணைந்துள்ளன.