அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையே அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விவாதம்
2022-09-13 17:52:42

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் கூட்டம் 12ஆம் நாள் ஆஸ்திரியா தலைநகரான வியன்னாவில் நடைபெற்றது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையே அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒரு முறையான நிகழ்ச்சி நிரலாக விவாதிப்பதற்கு இக்கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேற்கூறிய பிரச்சினை சேர்க்கப்படுவது இது 4 முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநாவின் வியன்னா அலுவலகத்துக்கான சீன நிரந்தர பிரதிநிதி வாங் சூன் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது கூறுகையில், பல்வேறு உறுப்பு நாடுகள், இந்த விவாதத்தின் மூலம், மூன்று நாடுகளுக்கிடையில் அணுசக்தி பொருட்களைச் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யும் உண்மையில் கவனம் செலுத்தி, குறிப்பிட்ட தீர்வுத் திட்டத்தைக் கண்டறிய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையைக் கூட்டாகப் பேணிகாத்து, சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.